ஆசிய உள்கட்டமை ப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank, AIIB)

 

சீனாவால் முன்மொழியப்பட்ட பன்னா ட்டு நிதி நிறுவனமாகும். இது ஆசிய வலய நாடுகளுக்கு இடையேயான, உட்கட்டமைப்பு நிதி உதவிகளை வழங்கும் பன்முக வளர்ச்சி வங்கியாகும். இதில் சீனா மட்டுமல்லாது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா , சிங்கப்பூர் என மொத்தம் 21 நாடுகள் உறுப்பினர்கள் ஆவர். வளரும் நாடுகளின் கட்டமைப்புத் தேவைகளை நிறைவே ற்ற இது போன்ற புதிய நிறுவனங்களை வரவேற்பதாக உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கித் தலை வர்கள் கூறியுள்ளனர். பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட இதன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் $ 100 பில்லியன் ஆகும்.

நோக்கம் 

ஆசியாவின் உள்கட்டமை ப்பு மற்றும் பொருளியல் நிலை ஒன்றிணைப்பை ஊக்குவிப்பதும் சீன மக்கள் குடியரசிற்கும் ஆசிய நாடுகளுக்கும் இடை யே கூட்டுறவை வளர்ப்பதும் ஆகும்.

வரலாறு

ஒக்டோபர் 2, 2013இல் இந்தோனேசியாவின் அரச தலைவர் சுசீலோ பாம்பாங் யுதயோனோவுடன் ஜகார்த்தாவில் நடந்த பேச்சுவார்த்தை களின்போது சீன அதிபர் சீ  சின்பிங் ஆசியாவின் உட்கட்டமைப்பு முதலீட்டிற்கான வங்கிக்கான முன்மொழிவை அறிவித்தார். இதனை யடுத்து சீனப் பன்னாட்டு முதலீட்டு நி றுவனத்தின் தலைவர் ஜின் லிகுன் முன்னேற்பாடு அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஒக்டோபர் 24, 2014 அன்று 

  • வங்காளதேசம், 
  • புரூணை, 
  • கம்போ டியா, 
  • சீன மக்கள் குடியரசு, 
  • இந்தியா, 
  • கசக்ஸ்தா ன், 
  • குவைத்,
  • லாவோஸ், 
  • மலேசியா, 
  • மங்கோலியா, 
  • மியா ன்மர், 
  • நேபாளம், 
  • ஓமான்,
  • பா க்கித்தா ன், 
  • பிலிப்பீன்சு, 
  • கத்தார், 
  • சிங்கப்பூர், 
  • இலங்கை , 
  • தாய்லா ந்து,
  • உசுபெக்கிசுத்தா ன்,
  • வியட்நாம் 


இதில் முன்னோட்ட உடன்பா ட்டில் கையெழுத்திட்டுள்ளனர். தொடர்ந்து 2015இல் பட்டய பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டு இறுதி உடன்பாடு காண்பர் என எதிர்பா ர்க்கப்படுகிறது. 2015இன் இறுதியில் ஆசிய உள்கட்டமை ப்பு முதலீட்டு வங்கி செ யற்படத் தொடங்கும் என மதிப்பிடப்படுகிறது. 

அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஆதிக்கம் நிறைந்த உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, அனைத்துலக நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுக்கு மாற்றாக புதிய வங்கியை த் தொ டங்க 2013ல் சீனா முன்மொழிந்தது. இதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 24, 2014 அன்று சீன தலை நகர் பீஜிங்கில் வங்கி அமைப்பதற்கான உடன்பாட்டில் 21 நாடுகளின் சார்பாளர்கள் கையெழுத்திட்டனர்.


Comments